Thursday, 9 June 2016

நனைந்தே போனேன்
-------------------------------------
அந்தி மாலைப் பொழுது
அவளைப் பார்த்து
ஆகியிருந்தன நாளிரண்டு
பயிற்சி முடித்து
பட்டணத்திலிருந்து நான்
பேருந்தில் நான் வருந்த
அழுகை என்னவோ வானத்தில் தான்..
ஆம் மழைதான்..! மழையேதான் !!!
அந்திப்பொழுது மாலை
அவள் வீடு நோக்கி
அடை மழையில் நான் ...
அவளைப் பார்ப்பதில்
என்னை விட
என் கால்களுக்கு ஆசை அதிகம்...
விரைவுப்பேருந்தும் சற்று
வேகம் குறைவுதான்
நான் அவளைக்காண போகும் வேகத்திற்கு.... !!!
அவளது வீடு நெருங்கினேன் ..
வேகத்தடை என் கால்களுக்கு ....
வாசலிலே வெண்ணிலா என
வாசங்கள் பல படித்ததுண்டு ....
ஆனால் பார்த்தது முதல் முறை ...!!
அவள் என்னை வாயில் பார்த்து
கண்ணில் சிரித்தால் .....
அதுவரை அடைமழையிலும்
நனையாத நான்
அந்த சிரிப்பு மழையில் முழுவதும்
நனைந்தே போயிருந்தேன்
என்றும் அன்புடன்..
ஜெ.பி