Friday, 10 February 2017

ஊர்க்காவலன்
----------------------------------
கொக்கரிக்கும் சிரிப்புக்காரி...
கோவப்பட்டா எரிமலை
வெடிப்புக்காரி...

வாயில கூர்வால்
சண்டைபோடும்...
மனசெல்லாம் அன்பு
மண்டிபோடும்...

வெண்டைக்காய்
மனசுக்காரி...
சண்டைனா..முதல்
பரிசுக்காரி....

பாசம்னா வெளிப்படையா
காட்டமாட்டா...
பாயாசம்னா நான்
இல்லாம குடிக்கமாட்டா..

கோவத்துல உயர் அழுத்த
நெஞ்சுக்காரி...
வேலைனு வந்துட்ட
நிறத்துல மட்டுமில்ல
நிஜத்துலயும் சொல்றேன்
வெள்ளைக்காரி...

ஒரு நாள் ஓடுர ஓடையில கால் வெச்சா...
கெண்டை மீனெல்லாம்
அவ கெண்டைக்காலழகுல
வெட்கி தல குனுஞ்சிடுச்சி.

சொக்கத்தங்க நிறத்தழகி..
சிவப்பு நிற உதட்டழகி...
கறுத்த விழி உருட்டி பாப்பா
வெறுக்கவே மாட்டேன் அவதான் என் பாப்பா....

பக்கத்துல நின்னா
கண்டுக்கவேமாட்டா...
காணாம போன
என்னை நினக்காம
கண்ணுரங்கமாட்டா..!

பாசக்காரி , ரோஷக்காரி.
அன்பில்லாத போல
நடிக்கரதுல எல்லா நடிகரும் தோற்கும்
வேஷக்காரி....

அவள போல ஆடையில
ஆயிரம் பேர் பாக்குறேன்..
அவளப்போல் ஜாடையில ஒருத்தரையும் காணோமே

சண்டையோ...
தண்ணில இருக்க
கெண்டையோ...
ரெண்டு பேர் மட்டும்
புடிச்சிகுங்க
மூனாம் ஆள உள்ள விட்டா
முடிச்சிடுவாங்க மொத்தமாக...அப்படி
முடிஞ்சவங்கல்ல
நானும் ஒருத்தன்...
இருந்திடாதிக மெத்தனமாக.....

வாழ்க்கை அவதானு
வெச்சிப்புட்டேன்
ஓரமாக..
வந்துட்டானா வாழ்க்கை போகும்..கரும்பு சாரமாக
இல்லன்ன எனக்கு மட்டும்
பாரமாக....

கட்டிக்க ஆசைப்பட்ட முதல்ல
காதல்ல விழனும்
அப்புறம் அவளுக்காக
யார் காலுல வேணும்னா
விழனும்..

விழுந்தவன் சொல்றேன்...
விழாதிங்க...காதல்ல...
அழாதிங்க... வேதனைல..
ஆனா ஒன்னுங்க...
அவ ஓரக்கண்ணால பாக்க்குற அழகுல..
ஒரு நாள் வாழ்ந்தாலும் அவ கூடதான்....

(மேற்கண்ட புலம்பல் எல்லாம் புதுசா திறந்த டீகடை ஓரம்...
ஒரு தினுசா பேசுற பைத்தியக்காரன்...
பசிக்குதுனு ஆரம்பிச்சி...
படுக்கைக்கு போற வரைக்கும்... பாப்பா பாப்பானு ..கூப்பாடு போடுறானாம்..)

பாவம் அவன் முடி வெட்டவும் இல்ல
இப்படி பட்ட வாழ்க்கைக்கு
முடிவுகட்டவும்..இல்ல...

அவன் அழுக்கு சட்டையில நான் பாத்ததென்னவோ..
அழகான வெள்ளை மனசு..
அடுத்த கடைக்கு போய்
ஐயா பசிக்குதுனு
ஆரம்பிச்சான்...முதல்வரி
கொக்கரிக்கும் சிரிப்புக்காரி.....

என்றும் அன்புடன்..ஜெ.பி

Wednesday, 2 November 2016

அவள்தான் ....அவளேதான்
----------;--------_-------------------------
ஒரு ஊரில் ...ஒரு ராஜகுமாரி...
அது எனக்கான...ஊர்
அவள் என்னுடைய ராஜகுமாரி தான்...

கதை ,திரைக்கதை
நான் தான்...ஆனால் தயாரிப்பும் இயக்கமும் அவள்தான்..ம்.அவளேதான்

கெண்டைக்கால் அழகில் விழுந்த ஒரு கொக்குகதை
தெரியுமா உங்களுக்கு...?
ம்..அது நான் தான்..நானேதான்
கெண்டைக்காலழகி யார் தெரியுமா..?
அவள்தான்..ம்.அவளேதான்

கண்களில்தானே விழும் காதல் எனக்கு மட்டும் அவள் காலில் விழுந்தது...
அவள் தலை முதல் கால் வரை அத்தனை அழகு...

உடல்பால் அவளை சொல்லும்  எனக்கு உணர்வின்பால் சொல்ல வாய்ப்பு கொடுங்கள்....

அன்று ஊருக்கெல்லாம் மார்கழி மாதம்...
அடியேனுக்கு அவள் வந்தால்தான் மார்கழி..
ம்..எனக்கும் மார்கழி அப்போது வந்தது...
ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு உணவு வழங்க அதிகாலை வேலை பேருந்தில் நான் ஏறினேன்
ஓட்டுனருக்கு பின்புறம் ஜன்னலுக்கு இடதுபுறம்..
அமர்ந்தேன்...சாலையோர அழகை ரசித்து வந்தேன்
அபோது பேருந்தில்...ஒரு தென்றல்...மார்கழி குளிர்கூட தோற்றுப்போகும்....
ம்.. அவள்தான்
 ..அவளேதான்..
எங்கோ செல்வாள் என்று நினைப்பதற்குள் ...
என் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தால்.
சற்று நேரம் என் கண்கள் இமைகளை தொலைத்துவிட்டு அவளை
இமைக்காமல் பார்த்தது...

ஜெயகாந்தனையும்..
வைரமுத்துவையும் .. நான் நேரில் பார்த்து இருக்க வாய்ப்பில்லை...
இன்னும் சற்று நேரத்தில் அவளைப்பற்றிய நினைவுகளை பகிரப்போகும்... விதம் அவள் கண்கள் என அனைத்தும் என்னை ஜெயகாந்தனின் கதைகளாகவும் வைரமுத்துவின் கவிதைகளாகவும் மாற்ற என் மனதில் தயாராக நின்றன..

பேருந்து புறப்பட்டது...பல நிறுத்தங்கள் வந்து இருக்கும் பேருந்திற்கு..
ஆனால் என் கண்கள் ஒரு இடத்தில் நின்ற்போய்விட்டது... காரணம்
ம்...அவள்தான்..
அவளேதான்....
[03/11, 07:09] jagathalaprathaban: மார்கழியில் அவள் அழகா..
இல்லை அவளால் மார்கழி அழகா...
சற்று சாலமன் பாப்பையாவை அழத்து
பட்டிமன்றம் வைக்கத்தோன்றியது...
சற்று நேரத்தில் அந்த எண்ணம் போனது எனக்கே தெரிந்துவிட்டது..முடிவு..
அவளால்தான் மார்கழி அழகு என்று.....

ஊருக்குப்போன அம்மா வாங்கிவந்த பலகாரங்கள் போல...
அதிகாலை வேலையில்
அப்பாவின் போர்வைக்குள்
உறங்கிய நினைவுகள் போல...பல அழகான நினைவுகளை அடியேனுக்கு கொடுத்தது அவள் அருகில் அமர்ந்த நொடி....காரணம்
அவள்தான்...அவளேதான்..

அடி கருவிழி கயல்விழி என்று என் மனதில் நினைத்தது அவளுக்கு கேட்டது போல் உடனே கடைக்கண் பார்வையை காட்டினால்...
அந்த அழகில் கீழே ஏதோ விழுந்து ..என்ன என்று
வளைந்து பார்தால்
அது நான் தான் நானேதான்....
காரணம் ...
அவள்தான்...அவளேதான்..
[03/11, 07:09] jagathalaprathaban:
[03/11, 07:09] jagathalaprathaban: விழுந்த இடத்தில் இருந்து அனைவரும் எழுந்துவிடுவார்கள்...
ஆனால் எனக்கு அவளைப்பார்துகொண்டே
இறந்துவிடத்தோன்றியது..
ஆனால் இறக்க வாய்ப்பில்லை...
ஏனென்றால் உயிர் அவள் வசம் சென்று ஆகியிருந்தன...நிமிடம் ஐந்து... ம்ம்ம்ம் அவளைப்பார்த்தது இவை அனைத்தும் நடந்து முடித்த
ஒட்டுமொத்த நேர அளவு அவ்வளவுதான்
[03/11, 07:09] jagathalaprathaban: சிறுவயதில் தலைகுளிக்க  சீயக்காய் தூள் போட கண்களில் எரிந்த அனைத்து வலிகளும் இன்று சுகமாய்ப்போனது..
காரணம் அவள்தான் அவளேதான்..
அவள் கூந்தலில் இருந்து வந்த அதே வாசம்...
அவள் கூந்தல் என்னை தொடுவதற்கு முன் சொல்லிமுடித்தது..
குளித்து முடித்து கொஞ்ச நேரம்தான் ஆனது என்று..
அவள் ஈரத்தலைமுடி என்மீது தொட்டவுடன்...
தெரிந்தது...
நன்றாக தொகுத்துப்பாருங்கள்
மார்கழி மாதம்..
அதிகாலை நேரம்..
பேருந்து ஜன்னல் ஓரம்..
அருகில் அவள்..
தென்றல் காற்று..
அடிக்கடி காற்றில் வருடும்
சீயக்காய் கூந்தல் வாசம்
செவ்விதழ் சிரிப்பு..
உலகில் சிறந்த அழகான இடம் இதுதனோ...?
இதுதான்...இதுவேதான்..
காரணம் அவள்தான்
அவளேதான்...
[03/11, 07:09] jagathalaprathaban: நடத்துனர் அடிக்கடி குனிந்து ஏதோ தேடிக்கொண்டிருந்தார்...
அப்போதுதான் புரிந்தது
காரணம் அவள்தான் அவளேதான்...
அவர் தேடுவது சில்லறைகள்
அது அவளது சிறிப்பு சப்தம் என்று எனக்கு மட்டும் தெரியும்....
ஆம் அவள் தோழியிடம் அலைபேசியில் பேசும்போது...அடிக்கடி சிரித்தால்...
இப்போது அலைப்பேசி துண்டிக்கப்பட்டது.
நானோ அவளது கண் பார்வை இணைப்புகள் வாங்க வரிசையில் முதலும் கடைசியுமாய் நிற்கிறேன்....
[03/11, 07:12] jagathalaprathaban: முடியாத பணிகள் அழைக்க இந்த முக்கியப்பணியை சற்று தற்காலிக வேலைநிறுத்தம் செய்கிறேன்...மீண்டும் வருவேன்..மீண்டுவராத காதலைப்பற்றி சொல்ல...அன்புடன்
ஜெகதலப்பிரதாபன்..

Thursday, 9 June 2016

நனைந்தே போனேன்
-------------------------------------
அந்தி மாலைப் பொழுது
அவளைப் பார்த்து
ஆகியிருந்தன நாளிரண்டு
பயிற்சி முடித்து
பட்டணத்திலிருந்து நான்
பேருந்தில் நான் வருந்த
அழுகை என்னவோ வானத்தில் தான்..
ஆம் மழைதான்..! மழையேதான் !!!
அந்திப்பொழுது மாலை
அவள் வீடு நோக்கி
அடை மழையில் நான் ...
அவளைப் பார்ப்பதில்
என்னை விட
என் கால்களுக்கு ஆசை அதிகம்...
விரைவுப்பேருந்தும் சற்று
வேகம் குறைவுதான்
நான் அவளைக்காண போகும் வேகத்திற்கு.... !!!
அவளது வீடு நெருங்கினேன் ..
வேகத்தடை என் கால்களுக்கு ....
வாசலிலே வெண்ணிலா என
வாசங்கள் பல படித்ததுண்டு ....
ஆனால் பார்த்தது முதல் முறை ...!!
அவள் என்னை வாயில் பார்த்து
கண்ணில் சிரித்தால் .....
அதுவரை அடைமழையிலும்
நனையாத நான்
அந்த சிரிப்பு மழையில் முழுவதும்
நனைந்தே போயிருந்தேன்
என்றும் அன்புடன்..
ஜெ.பி

Saturday, 26 March 2016

அன்னை தெரசா

   அன்னை தெரசா
      எழுத்துக்கள் இல்லை 
       உன்  (முக)வரிகளில்
       ஆனாலும் அழகு!
        முண்டாசுக்கவிதை நீ
     ஆதரவற்ற குழந்தைகளின் 
    முகவரி அழகுதானே என்றும் 
பொறுமையின் உச்சம் நீ
வெறுமையின் மிச்சம் நீ...
பிறப்போ உலகின் ஒர் மூலை
நடப்போ ஆதரவற்றோர் 
நடக்கும் சாலை...
\வேதம் சொல்லதான் வந்தாய்
ஆனால் எம்மில்
 வேறுபாடு களைந்தாய் 
எங்களுக்கு நீ ஒரு கலைத்தாய்..
வெண்ணாடைக்குள் ஒரு பரிசுத்தம் 
பொன்னாடைகள் எல்லாம் 
உன் பின் நிற்கும்..
அன்பின் அடையாள சின்னம் 
உனக்கு பின் யாருமில்லை
என்பதே திண்ணம்..
ஓய்வு இல்லை உனக்கு 
ஓய்ந்தாலும் வீழ்வதில்லை
அன்பின் செருக்கு..!!1
கருவறை இல்லாத தாய் 
நீ ஒருவளே.. 
ஊர் குழந்தைகளின் 
ஓர் அனனையே 
உலக உயிர்களின்
தாகம் தீர்க்கும் தென்னையே....ஜெ.பி







Wednesday, 9 March 2016

அன்புள்ள கவிஞர்களே வருக வருக...
கவிதை எழுதும் திறன் உடையவர்கள் இந்த குழுவில் சேர தாங்கள் கைப்பேசி எண்ணை கீழ்கண்ட எண்ணிற்கு அனுப்பி கவிதைக்குழுவில் இணைந்து கவிதைகள், கட்டுரைகள் சுயமாக எழுதலாம்...9789252266(நிலாகவிதைக்குழு)